?! தொடர்கிறது

காஞ்சிபுரத்தில் டீக்கடை, ஸ்டேஷனரி, கசாப்பு கடை என அத்தனை கடை போர்டுகளிலும் சிநேகா ஆலூக்காஸ் ஜூவல்லரிக்காக சிரித்துக்கொண்டிருக்கிறார். சேட்டன்கள் தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் கடை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். காஞ்சியில் கடை திறப்புவிழாவிற்கு ஸ்ரீதேவி வந்தபோது அந்த ஏரியாவில் வரலாறு காணாத டிராபிக் ஜாம் ஆகியிருக்கிறது. கேரளாவிலோ கல்ஃபிலோ தங்கவயல் சிக்கிவிட்டது போல. ஒரு முறை திருநெல்வேலி ஆலூக்காஸில் நண்பன் திருமணத்திற்கு கோல்ட் பிளேட்டட் படம் வாங்க சென்றிருந்தோம். இரண்டு நிமிடத்தில் நாங்கள் தேர்வு செய்த பொருளுக்கு பில் போட, கிரெடிட் கார்ட் மூலம் பணம் கட்டியதால், அவர்களுக்கு முக்கால் மணி நேரம் ஆனது. சேட்டன்களின் தங்கத்தின் தரத்தை நாம் சோதிப்பதைவிட கிரெடிட் கார்டையும் நம் பொறுமையையும் அவர்கள் நிறையவே சோதிக்கிறார்கள்.

சிநேகா ஆலூக்காஸ் விளம்பரத்தில் வருகிறாரே 'ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே' விளம்பரம் இப்போது வருவதில்லையா?

சிநேகாவுக்கு வந்த எஸ்.எம்.எஸ் பற்றி சென்ற வார ஜூவியில் கவர் ஸ்டோரி வந்திருந்தது. அதற்கு முந்தைய வார ஆ.வி.யில் 'கோவா' பட விளம்பரத்திற்காக காமெடியென நினைத்து அவர்கள் செய்ததை மறந்துவிட்டார்கள் போல.

****

டாடா கோல்ட் ப்ளஸ் நிறுவனத்தினர் பெண்கள் சுய உதவி குழுக்களை டார்கெட் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஏரியாவுக்கும் சென்று தங்கத்தின் தரத்தைக் கண்டுபிடிப்பது எப்படி என வீடியோவுடன் விளக்கிவிட்டு மாதத்திற்கு இருநூற்றைம்பது, ஐநூறு என சீட்டு சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

****

சில மாதங்களுக்கு முன் ஜூவியில் செங்கல்பட்டு ஏரியாவில் மண்ணுளி பாம்பைப் பிடித்துக் கொடுத்து பணம் வாங்குகிறார்கள் என கட்டுரை வந்திருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன் வந்தவாசி அருகிலுள்ள மாமா ஊருக்குச் சென்றிருந்தேன். அங்கும் 'மண்ணுளி பாம்பு' வியாபாரம் கன ஜோராக நடக்கிறதாம். பாம்பைத் தேடி மலை மலையாக அலைந்துகொண்டிருக்கிறார்கள். பாம்பின் தரத்திற்கு(?!) ஏற்றவார் ஐம்பதாயிரம் முதல் இரண்டு லட்சம் வரை கொடுக்கிறார்களாம். தனக்கு தெரிந்த ஒருவர் ஒரு லட்சம் வாங்கியதாக மாமா சொன்னார்.

பாம்பு பிடித்துக் கொடுத்து பணம் பார்க்கலாமென்றால் அந்த பாம்பின் லவ்வர் வந்து பழி வாங்குமோ என்ற பயம் தடுக்கிறது.

****

அலுவலக கேண்டீனில் காண்டிராக்ட் எடுத்திருக்கும் அந்த 'சஃபாரி சூப்பர்வைஸர்' ஓட்டல் தனிக்காட்டு ராஜாவாக கல்லா கட்டிக்கொண்டிருந்தது. சென்ற மாதம் 'சாம்பார் இட்லி' ஓட்டலும் உள்ளே வந்ததில் இவர்கள் கடையில் கூட்டம் குறைந்துவிட்டது.

சென்ற வாரம் ஒருநாள் மதியம் 'சாம்பார் இட்லி' ஓட்டலில் 'சஃபாரி ஓட்டல்' சூப்பர்வைஸர் மஃப்டியில் கட்டம் போட்ட சட்டையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அடுத்த நாள் காலை 'என்ன பாஸ் நேத்து மதியம் அங்க டெஸ்டிங்கா?' எனக் கேட்டதும் முதலில் அதிர்ந்தவர் 'பார்த்துட்டீங்களா' என சிரித்தார். 'சாம்பார் இட்லி' சாப்பாடு எப்படியிருந்ததெனக் கேட்டதற்கு 'கொஞ்சம் உப்பு கம்மி..நம்ம ஓட்டல் அளவுக்கு வராது..அதை நான் சொல்லக்கூடாது' என்றார்.

'அதான் சொல்லிட்டீங்களே' என நினைத்துக்கொண்டேன்.

****

'ஹீரோவோண்டா அச்சீவர்' என்றால் பெரும்பாலானோர்க்கு தெரிவதில்லை. வெறுவமனே 'ஹீரோவோண்டா' என்றாலும் 'ஹீரோவோண்டால?' என்று துணைக் கேள்வி எழும். 'இந்த மாடல் இப்ப வர்றதில்லீங்க.நிறுத்திட்டாங்க' என்று அதன் வரலாறு கூற வேண்டியிருக்கும். அந்த காலத்தில் ஆம்பிஷன் என 135சிசி மாடல் இருந்தது ஞாபகமிருக்கிறதா? சிபிஸி உற்பத்தியை சிறிது காலம் நிறுத்தியிருந்தபோது ஆம்பிஷனை 150சிசிக்கு மாற்றி சிலப்பல மாற்றங்கள் செய்து அச்சீவராக வெளியிட்டார்கள். ஹோண்டா யூனிகார்னுக்கும் அச்சீவருக்கும் ஒரே இஞ்சின். அடுத்த வருடமே சிபீஸி மாடலை திரும்பவும் உற்பத்தி செய்ய ஆரம்பித்ததும் இதை நிறுத்திவிட்டார்கள். இப்போது சென்னையில் என் பைக்கையும் சேர்த்து முந்நூத்தி சொச்சம் அச்சீவர்கள் ஓடிக்கொண்டிருக்கலாம்.

2005-ல் பைக் வாங்கிய பிறகு ஒரே ஒரு முறை காப்பீடு புதுப்பித்திருந்தேன். அப்போதே ஓரிஜினல் பாலிசி டாக்குமெண்ட்ஸை தொலைத்திருந்தேன். அதன் பின் இரண்டு ஆண்டுகள் வண்டி ஓரங்கட்டப்பட்டது. மார்ச் மாதம் ஊர் திரும்பியதும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொலைத்த டாக்குமெண்ட்ஸை தேடுவதில் பயனில்லையென காப்பீடு இல்லாமலே காலத்தை ஓட்டினேன். 'டாக்குமெண்ட்ஸ்' இல்லாமல் ஓடிப் பழகிய வண்டி டிராபிக் போலீஸை பார்த்தால் தன்னாலே வேகம் குறைத்து வலது லேனுக்கு சென்றது.

சென்ற மாதம் ஒருமுறை திருவான்மியூரில் டிராபிக் போலீஸ் நிறுத்தி 'டாக்குமெண்ட்ஸ்' கேட்டார். இல்லையென சொல்லாமல் வண்டியை ஓரங்கட்டி சீட்டுக்கடியிலிருந்து 'டாக்குமெண்ட்ஸ்' எடுப்பதாய் பாவனை செய்துகொண்டிருந்தேன். அதற்குள் அவர் மேலும் இரண்டு வண்டிகளை நிறுத்தியிருந்தார். இரண்டு நிமிடம் கழித்து அப்பாவியாக முகத்தை மாற்ற முயற்சித்துக் கொண்டே 'சார் டாக்குமெண்ட்ஸ் சீட்டுக்கடியில இருக்கு. லாக் ஸ்ட்ரக் ஆயிடுச்சு..தொறக்க முடியல' என்றேன். ஏற இறங்க பார்த்தவர் 'டாக்குமெண்ட்ஸ் உண்மையாவே இருக்கா?' என்றார். 'இருக்கு சார்..சீட்டு தான் தொறக்க முடியல' என அவர் கண் முன்னே மீண்டும் திறக்க முயற்சிப்பது போல் சாவியை வெளியே எடுத்தேன். அவருக்கு நம்பிக்கை வந்திருக்க வேண்டும். கிளம்ப சொல்லிவிட்டார். நூறோ இருநூறோ தப்பியதென நன்றி சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினேன்.

ஒவ்வொரு முறையும் இதுபோல் அதிர்ஷ்டம் துணைக்கு வராதென சென்ற வாரம் இன்ஷூரன்ஸ் எடுக்கச் சென்றேன். 'பழைய பாலிசி பேப்பர்ஸ் இல்லாம எடுக்க முடியாது' என தீர்க்கமாக சொன்ன -'James Hadley Chase' நாவலை டேபிள் நடுவிலும் மற்ற கோப்புகளை மூலையிலும் வைத்திருந்த - அலுவலரிடம் 'சார் வீடு மாறும்போது தொலைஞ்சுடுச்சு சார்..புது வண்டி சார்..' என ஏதேதோ பேசி ஒருவழியாக இன்ஷூரன்ஸ் எடுத்துவிட்டேன். ஆனால் அதன் பின்னும் என் சோம்பேறிதனத்தால் பாலிசி பேப்பர்கள் நகல் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறேன்.

தாம்பரம்-வேளச்சேரி சாலையில் மேடவாக்கம் தாண்டியதும் சந்தோசபுரம் என்று ஒரு ஏரியா இருக்கிறது. அங்கே கடைகளோ வீடுகளோ இல்லாமல் காலியாக இருக்கும். டிராபிக் கொஞ்சம் வேகமாக நகரும். பெரும்பாலும் அந்த இடத்தில் டிராபிக் போலீஸ் நின்று வேகமாக வருபவர்களைப் பிடிப்பார்கள். நேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது இருநூறு மீட்டர் முன்னால் ஒரு டிராபிக் பேட்ரோல் வண்டி நின்றுகொண்டிருந்தது. மெதுவாக வலது லேனுக்கு மாறினேன். டிராபிக் கான்ஸ்டபிள் ரோட்டோரம் நின்றிருப்பது தெரிந்தது. முன்னால் சென்ற வாகனங்கள் வேகத்தைக் குறைத்தன. வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கிறதா என எட்டிப் பார்த்தபோது இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. 'அப்படியே யூ அடிச்சிருவோமா' என யோசித்துக்கொண்டிருக்கும்போதே நூறு மீட்டர் நெருங்கிவிட்டேன். 'இன்னைக்கு கெளம்பும்போது நாய் குறுக்க வந்துச்சே அதனால இருக்குமோ' என எண்ணியபடி வேகத்தை சிறிது கூட்டினேன். போலீஸ் வாகனத்துக்கு இன்னும் ஐம்பது அடிகளே இருந்தது. யாரையும் நிறுத்தி வைத்திருக்கவில்லை.'நாமதான் மொத போணி போல' என்று நெருங்கியபோது அந்த டிராபிக் கான்ஸ்டபிள் சுவரோரம் ஒண்ணுக்கடித்துக்கொண்டிருந்தார்.



34 பின்னூட்டங்கள்:

சொன்னது...

மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய்ய்ய்! :)))

சொன்னது...

//"?! தொடர்கிறது"//


டைட்டில்லயே வாழ்க்கை பத்தி இம்புட்டு சிம்பிளா சொல்லிட்டீங்களே தெய்வமேஏஏஏஏஏஏஏஏ:)))

சொன்னது...

/கேரளாவிலோ கல்ஃபிலோ தங்கவயல் சிக்கிவிட்டது போல//

இங்கதான் பாஸ் சேட்டன் மாரெல்லாம் சேர்க்குறாங்க அம்புட்டு காசு :(

சொன்னது...

ஐய்... குரு is back :))))))

மீ தி செகண்டு :))))

சொன்னது...

//பாம்பு பிடித்துக் கொடுத்து பணம் பார்க்கலாமென்றால் அந்த பாம்பின் லவ்வர் வந்து பழி வாங்குமோ என்ற பயம் தடுக்கிறது.//

ROTFL :)))))) உங்களால மட்டும் தான் இப்புடி எல்லாம் யோசிக்க முடியும் ;-)))

சொன்னது...

//அலுவலக கேண்டீனில் ...
'அதான் சொல்லிட்டீங்களே' என நினைத்துக்கொண்டேன்.//

இத ஏற்கனவே படிச்சிருக்கோமேனு யோசிச்சிக்கிட்டே படிச்சேன். லாஸ்ட்ல தான் ஞாபகம் வந்துது.. போன மீட்ல நீங்க சொன்ன மேட்டர் இதுனு :)))

சொன்னது...

//'இருக்கு சார்..சீட்டு தான் தொறக்க முடியல' என அவர் கண் முன்னே மீண்டும் திறக்க முயற்சிப்பது போல் சாவியை வெளியே எடுத்தேன்.//

அவ்வ்வ்வ்... நடிப்பு திலகம் கப்பி வாழ்க வாழ்க :)))

சொன்னது...

//ஆனால் அதன் பின்னும் என் சோம்பேறிதனத்தால் பாலிசி பேப்பர்கள் நகல் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறேன். //

ஆமா ஆமா.. ஒரிஜினலை ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பேக்ல போட்டு முதுகுல மாட்டிக்கிட்டே தான் சுத்திட்டிருந்தாரு :))))

சொன்னது...

//'இன்னைக்கு கெளம்பும்போது நாய் குறுக்க வந்துச்சே அதனால இருக்குமோ'//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

சொன்னது...

இப்பவாவது ஜெராக்ஸ் எடுத்தீங்களா???

10 போட்டுட்டு மீ தி அப்பீட்டு :D

சொன்னது...

//அப்படியே யூ அடிச்சிருவோமா' என யோசித்துக்கொண்டிருக்கும்போதே நூறு மீட்டர் நெருங்கிவிட்டேன். 'இன்னைக்கு கெளம்பும்போது நாய் குறுக்க வந்துச்சே அதனால இருக்குமோ' என எண்ணியபடி வேகத்தை சிறிது கூட்டினேன்.//

அப்படியே கிட்டத்துல நெருங்க நெருங்க மனசு திக் திக் அடிச்சுக்கிட்டே இருக்கும்! - மாட்டுனா அம்புட்டுத்தான் ரேஞ்சுக்கு - ஆனா ஒரு டிஸ்டர்பன்ஸும் இல்லாம கிராஸ் பண்ணிட்டா ஒரு தெனாவட்டு சிந்தனை வரும் பாருங்க - ஏம்ப்பா என்னைய புடிக்கல? - அது வந்துச்சா பாஸ்???!!! :)))

சொன்னது...

//அப்படியே கிட்டத்துல நெருங்க நெருங்க மனசு திக் திக் அடிச்சுக்கிட்டே இருக்கும்! - மாட்டுனா அம்புட்டுத்தான் ரேஞ்சுக்கு - ஆனா ஒரு டிஸ்டர்பன்ஸும் இல்லாம கிராஸ் பண்ணிட்டா ஒரு தெனாவட்டு சிந்தனை வரும் பாருங்க - ஏம்ப்பா என்னைய புடிக்கல? - அது வந்துச்சா பாஸ்???!!! :)))//

பாஸ்.. அனுபவம் ஏகப்பட்டது இருக்கும் போல ;))))

சொன்னது...

Welcome Back Kappi..

சொன்னது...

கலக்கல் ராசா ;)))

சொன்னது...

vaanga vaanga.. unga kappi thanam illama romba kammiya irundhudhu ;-)

சொன்னது...

//பாம்பு பிடித்துக் கொடுத்து பணம் பார்க்கலாமென்றால் அந்த பாம்பின் லவ்வர் வந்து பழி வாங்குமோ என்ற பயம் தடுக்கிறது.// vi.vi.si...!

சொன்னது...

Welcome back :-)

சொன்னது...

ஆயில்யன்

நீங்க எப்பவுமே ஃபர்ஸ்ட் தான் அண்ணாச்சி :)))

//
டைட்டில்லயே வாழ்க்கை பத்தி இம்புட்டு சிம்பிளா சொல்லிட்டீங்களே //

அப்டீங்கறீங்க ;)

//தெனாவட்டு சிந்தனை

அதில்லாமயா :))

சொன்னது...

G3

//போன மீட்ல நீங்க சொன்ன மேட்டர் இதுனு //
சொல்லிட்டேனா :D


//ரிஜினலை ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பேக்ல போட்டு முதுகுல மாட்டிக்கிட்டே தான் சுத்திட்டிருந்தாரு :))))//

அது போன வாரம் ஹி ஹி

/10 போட்டுட்டு மீ தி அப்பீட்டு :D//

அவ்வ்வ்வ் :))

நன்றி!

சொன்னது...

இளா

ஒரு வழியா :))

சொன்னது...

கோபிநாத்

/கலக்கல் ராசா//

ஆறு மாசமா மாறாம இருக்கறது நீங்க ஒருத்தர்தாண்ணே ;)

சொன்னது...

பொற்கொடி

//unga kappi thanam illama romba kammiya irundhudhu //


அட.. :))

வி.வி.சிக்கு ந.ப!

சொன்னது...

வெட்டி

வந்தேன் :-)

சொன்னது...

வெல்கம் பேக் ராசா.. :)

சொன்னது...

/ ஆயில்யன் said...

//"?! தொடர்கிறது"//


டைட்டில்லயே வாழ்க்கை பத்தி இம்புட்டு சிம்பிளா சொல்லிட்டீங்களே தெய்வமேஏஏஏஏஏஏஏஏ:)))//

பின்னே... KTM’ன்னா சும்மா’வா... :))

சொன்னது...

பாலிசி ஆவணம் எதாவது கேட்டா
உருகுவே,பராகுவே வாவே போவேன்னு நாலு வார்த்தை எஸ்பான்யொல் எடுத்து விடறதுதானே
கப்பி.

மறந்து போச்சா.

சொன்னது...

Arivujeevi vanthuddaaru. Welcome back. Hehehe

சொன்னது...

"thodargirathu"... Vazhkkaiyai romba nonthu ezhuthure mathiri iruke???

சொன்னது...

Welcome Back!!!

சொன்னது...

:)

சொன்னது...

வாய்யா வாய்யா... :)

என்னது பாம்பு பிடிச்சுக் கொடுத்தா இம்பூட்டுக் காசு கொடுக்கிறாய்ங்களா? அதில அப்படி என்ன விசேஷம்... அது என்ன மண்ணுளி பாம்பு (uropeltit or sand boa???)

சொன்னது...

Kappi Welcome Back :)

Kadaisi para padichittu sathamaa sirichutten :))

சொன்னது...

சிநேகா ஆலூக்காஸ் விளம்பரத்தில் வருகிறாரே 'ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே' விளம்பரம் இப்போது வருவதில்லையா? //
அது ஆலுக்காஸ் விளம்பரமா.... சரவணா ஸ்டோர்ஸ் இல்ல?

நல்ல மார்க்கெட்டிங் டெக்னிக் டாடா கோல்ட் ப்ளஸ்.

இரண்டு வாரங்களுக்கு முன் வந்தவாசி அருகிலுள்ள மாமா ஊருக்குச் சென்றிருந்தேன். //
இப்பத்தியின் கடைசிவரி வாசிக்கும் வரை ஊர் பேர் “மாமா” என நினைத்திருந்தேன். :O

சொன்னது...

தங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2010/10/blog-post_05.html